ஆம்பள பிள்ள பெறக்கும்னு நினச்சா அது பொம்பள பிள்ளயா பெறந்துச்சாம் .இதுக்கு யாரை குத்தம் சொல்ல முடியும்? புருசனையா ,பொஞ்சாதியையா ?
விதின்னு நெனச்சுக்கிட்டு பெறந்த பிள்ளய பத்திரமா வளர்க்க வேண்டியதுதான்.!
அப்படித்தான் ஆகிப்போச்சு. இயக்குநர் நிதினின் கதையும்.!
அந்தாதுன் இந்தப்படத்தை தெலுங்கில் எடுப்பதற்கு முடிவு செய்து படப்பிடிப்பினை கொரானா முடிந்ததும் எடுக்கலாம் என்று முன்னதாக செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்தார்.
முக்கிய வேடத்தில் தபு நடித்த வேடத்தில் முக்கியமான பிரபலம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார்.
இலியானாவை அணுகினார்.ஆனால் எதிர்மறையான பதில்தான் .! ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கேரக்டரில்தான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டாராம்.
அடுத்து அணுகியது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை..!
அந்த வேடத்தில் நடிப்பதற்கு 9 கோடி கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் 5 கோடிதான் தருவோம் என்று சொல்லப்பட்டதாக தெரிகிறது. மீடியம் பட்ஜெட் படத்துக்கு 5 கோடியே அதிகம் தாங்காது என்று தயாரிப்பு தரப்பு சொன்னாலும் இயக்குநர் நிதின் நம்பியது நயன்தாராவை.! பணத்தை எடுத்து விடலாம் என்கிற நம்பிக்கை.
ஆனால் லேடி சூப்பர்ஸ்டார் ஒத்துக்கலியே!