வெள்ளிக்கிழமை அதுவுமா ஒரு தற்கொலை செய்திதான் கிடைக்கணுமா?
அரசியல்வாதி சாவு நடிகை தற்கொலை இதெல்லாம் நாளும் கிழமையும் பார்த்து வர்றதில்லை.கொரானா காலமாச்சே என்று மரணம் இரக்கம் பார்ப்பதில்லை. வந்ததும் தெரியாதும் போனதும் தெரியாது இதான்யா மானிட வாழ்க்கை.!
அனுபமா பதக் .போஜ்புரி நடிகை .மும்பை அபார்ட்மெண்டில் தூக்கில் தொங்கி விட்டார். ஆகஸ்ட் 2 ஆம் தேதியே தொங்கிய நடிகையைப் பற்றி இப்போதுதான் மீடியாவில் செய்தி வருகிறது.
நல்ல வேலை .தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்துவிட்டுத்தான் முடிவினை மேற்கொண்டிருக்கிறார்.
இதற்காகவா அற்புதமான உயிரை இழந்திருக்கிறார் ,ச்சே என்ன பொண்ணுய்யா என்று நினைக்கத் தோணும்.
சினிமா நடிகை என்றதும் அவர்களின் சிங்கார வாழ்க்கைத்தான் கண் முன்னால் வந்து நிற்கும். ஆனால் கொரானா கொள்ளை நோய் அவர்களது வருமானத்தை அல்லவா அணை போட்டு தடுத்திருக்கிறது.
“நண்பரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு தயாரிப்பாளர் நடத்திய சீட்டுக்கம்பெனியில் பத்து ஆயிரம் கட்டியிருந்தேன்.2019 டிசம்பரில் மச்சுயூரிட்டி முடிந்தும் பணம் தராமல் ஏமாற்றி விட்டார்.
என்னுடைய சொந்த ஊரை சேர்ந்த மனிஷ் ஷா என்பவர் என்னுடைய டூ வீலரை எடுத்துக்கொண்டு போயிருந்தார். திருப்பித்தரும்படி கேட்டதற்கு கொடுக்க மறுத்து விட்டார் .யாரையும் நம்பமுடியவில்லை. ஆகவே இந்த முடிவினை ஏற்க வேண்டியதாயிற்று “என்பதாக கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.
அட பாவமே.!