விஷால் நடிக்கவிருந்த ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு, அல்லு அர்ஜூனின் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை லிங்குசாமி தொடர்ந்தார்.இதையறிந்த விஷால் கடுப்பாகி, ‘சண்டக்கோழி 2’ படத்தை டிராப் செய்வதாக அதிரடியாகஅறிவித்தார். இதையடுத்து தான் கொடுத்த முன்பணத்தை திரும்பப் பெற்றுத்தருமாறு தயாரிப்பாளர் சங்கத்திடம் புகாரும் கொடுத்தார். இந்நிலையில், திடீரென அல்லு அர்ஜூன் இந்த படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
லிங்குசாமி கடைசியாக இயக்கிய ‘வேட்டை’ , அஞ்சான் இரண்டுமே தோல்வி படங்களாக அமைந்ததாலும் விஷாலின் மனக்கசப்பை மீறி இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று அல்லு அர்ஜூன்முடிவு செய்து திடீரென பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. லிங்குசாமியின் தற்போதைய நிலை வட போச்சே…!என்ற நிலையில் உள்ளதாம்.தற்போது விஷாலிடம் சமாதான தூதுக்கு முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.