அரசியலிலும் சரி ,வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் சரி கருத்து வேறுபாடு இல்லாத இயக்கமே இருக்காது. “ஒருமித்த தீர்மானம் என்று சொன்னாலும் உள்குத்து இருக்கும் “என்பார் அரசியல்வாதி.
திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விரைவில் தேர்தலை சந்திக்கிற நிலையில் ‘நடப்புத் தயாரிப்பாளர்கள் அசோசியேசன் “என்கிற புதிய அமைப்பு பாரதிராஜா தலைமையில் ஒரு அமைப்பு தற்போது உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே இருக்கிற சங்கம் உடைபட்டுவிடக்கூடாது என்று பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒன்றிணைக்கிற முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால் முயற்சி பலன் தரவில்லை. “ஒரு கும்பலின் பிடியில் சூழ்நிலை கைதியாகிவிட்டார் “என்கிறார் தாணு.
‘பாரதிராஜா என்னிடம் மனம் விட்டு பேசினார். அவரை சூழ்ந்துள்ள கும்பலே அவரை இப்படி செய்ய வைத்துள்ளது. அவர் தலைவராக வர விரும்பினால் அவரது பொறுப்பை போட்டியின்றி தேர்வு செய்துவிட்டு மற்ற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் வைக்கலாம் என சொன்னோம். எல்லோரிடமும் கலந்து பேசி பண்ணுகிறேன் என்று சொல்லித்தான் அறிக்கை விடுத்தார். அடுத்த 2 நாட்களில் ஒரு கும்பல் அவரை சந்தித்து பேசி கையெழுத்து வாங்கி அறிக்கை கொடுத்துவிட்டது. அவர் சூழ்நிலைக் கைதி ஆகிவிட்டார்’ எனக் கூறுகிறார் கலைப்புலி தாணு.
இந்த நிலையில் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.இதற்கு பாரதிராஜா நன்றி தெரிவித்து கமலை வரவேற்றிருக்கிறார் .