மிகவும் பிரமாண்டமாக அமையவிருக்கிற ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்த ராமர் கோவிலுக்கு 8 கோடி நிதி கொடுத்தார் நடிகர் ஷாருக் கான் என்கிற செய்தியை வட இந்தியாவில் இருக்கிற சில ஊடகங்கள் எழுதி பரபரப்பு சேர்த்தன.
இந்த செய்தியின் நோக்கம் அதன் பின்னணி என்ன என்பது தெரியாது!
உண்மைதானா 8 கோடி கொடுத்தது?
ஷாருக்கானின் சீனியர் மானேஜர் குமுறி விட்டார் .
“உங்களுக்கு வேற வேலை எதுவுமே இல்லையா? தப்பான செய்தியை எப்படி உங்களால் தைரியமாக வெளியிட முடிகிறது. இப்படித்தான் கொரானாவுக்கு பயந்து பிளாஸ்டிக் கவரினால் வீட்டை மூடி இருக்கிறார் என்று எழுதினீர்கள். ஒவ்வொரு பருவ மழைக்கும் இப்படித்தானே பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி வருகிறோம்.அதை மறைத்து விட்டு எழுதினீர்கள்!” என்று சாடி விட்டார்.