1989 -ஆம் ஆண்டில் வெளியான படம் சிவா .
கவிதாலயா தயாரிப்பு .வேதம் புதிது கண்ணன் கதை வசனம். அமீர்ஜான் இயக்கம் .முக்கிய பாத்திரங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி ,ஷோபனா ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சுவையான சம்பவத்தை நினைவு கூர்ந்தார் ஷோபனா.
“ஒரு காட்சியில் என்னுடைய கால்களை பணிந்து ரஜினிகாந்த் தொட வேண்டும்.ஆனால் ஏனோ தெரியவில்லை. ரொம்பவுமே தயங்கினார். இயக்குநரிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் பலனில்லை .அந்த சீனில் நடித்தே ஆகவேண்டும் என்பதில் அமீர்ஜான் உறுதியுடன் இருந்தார். இதனால் அந்த காட்சி எடுத்து முடிக்கப்பட்டது.
படம் ரிலீஸ் ஆனது.!
அவ்வளவுதான் ரசிகர்கள் பொங்கிவிட்டார்கள் .எப்படி நடிகையின் காலில் சூப்பர்ஸ்டார் விழலாம் என்கிற அளவுக்கு கொந்தளித்து விட்டார்கள். அப்போதுதான் புரிந்தது ,ரஜினி ஏன் அந்த காட்சியில் நடிப்பதற்கு தயங்கினார் என்பது !”என்று அந்த நாள் ஞாபகத்தை பகிர்ந்து கொண்டார்.