நடிகர் ,இயக்குநர் ,தயாரிப்பாளர் ராகவா லாரன்ஸ். சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிரமான விசுவாசி.
ரஜினியை விமர்சித்த அரசியல்வாதிகளை விட்டு வைத்ததில்லை. நாம் தமிழர் சீமானை கடுமையாக விமர்சித்தவர். அவர் தற்போது அரசியலுக்கு வந்தால் என்ன செய்வேன் என்று சொல்கிறவர்களுக்கு அறிவுரை மாதிரி ஒரு பதிவை தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சூப்பர்ஸ்டாரின் 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையைக் கொண்டாடி வருகிற நிலையில் இந்தப்பதிவு வெளிவந்திருக்கிறது.
அரசியலுக்கு வராமல் நல்லது செய்ய முடியுமே !அதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன் என்று தன்னை உதாரணம் காட்டி இருக்கிறார். ரஜினியின் நெருங்கிய பக்தர் ராகவா லாரன்ஸ் .அவரே இந்த மாதிரியான பதிவை வெளியிட்டிருப்பது ….சில சந்தேகங்களை எழுப்புகிறது.
‘நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்றும், ஏழை மக்களுக்கு அது செய்வேன் இது செய்வேன் என்றும் சொல்லி நேரத்தை வீணடிப்பதைவிட, அமைதியாக இருந்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி சமூகத்துக்குச் செய்வதே சிறந்தது.
இதற்கு முன்னால் பதிவிட்ட வீடியோ என்னுடைய 12 ஆண்டுகால முயற்சி மற்றும் நம்பிக்கைக்குச் சான்று. அவர்களது கனவுகள் நனவானதை நீங்கள் காணலாம். இந்தக் குழந்தை உட்பட மற்ற 200 குழந்தைகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வராமலும் இவற்றைச் செய்வது சாத்தியம்தான். சேவையே கடவுள்” என அந்த பதிவில் சொல்லியிருக்கிறார் .