தமிழில் ரஜினிபடங்களுக்கு அடுத்த படியாக வசூலில் முதலிடத்தில் நிற்பது விஜய் படம் மட்டுமே! இவ்ர்க்கென பலம் வாய்ந்த ரசிகர் மன்றங்களும், ரசிகர்களும் லட்ச கணக்கில் உள்ளனர். விஜய் சினிமாவில் ஆரம்ப காலம் தொட்டே தனது ரசிகர் மன்றங்கள் சார்பில் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு குழந்தையின் எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு விஜய் தன் மக்கள் இயக்கம் சார்பில் பண உதவி செய்தார். இதையடுத்து சிவகார்த்திகேயனும் ரூ 1 லட்சம் அந்த குழந்தையின் ஆபரேஷனுக்கு நிதி கொடுத்துள்ளார்.இது தொடர்ந்தால் 10 வருடங்களுக்கு பிறகு ரசிகர்களின் செல்வாக்கு மிக்க நடிகர் களின் பட்டியலில் ( அதற்கு அவர் நடிக்கும் படங்களும் கை கொடுக்க வேண்டும் என்பது வேறு விஷயம்!) சிவ கார்த்திகேயனும் இடம் பெறுவார் என்கிறார்கள்.