மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில்,ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமான , ‘அபூர்வ ராகங்கள் கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ம் தேதி வெளியானது.இந்நிலையில் ரஜினிகாந்தின் திரையுலகப்பயணம் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன.இதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில்,ரஜினியின் 45 வருட திரையுலக பயணத்தை பெருமைப்படுத்தும் விதமாக சௌந்தர்யரஜினிகாந்த்,இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் ,அட்லீ, சிவகார்த்திகேயன்,துல்கர்சல்மான்,ராகவாலாரன்ஸ்,மோகன்லால்,மம்மூட்டி சுனீல்ஷெட்டி உள்பட பல திரையுலக பிரபலங்கள் இணைந்து ரஜினி போஸ்டர்(காமன் டிபியை)
ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து,தனக்கான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்த திரையுலக பிரபலங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த ரஜினி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,
“என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை”.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻
— Rajinikanth (@rajinikanth) August 9, 2020