“இரண்டு பெண்களுக்கிடையில் மலர்ந்த காதலை மிகுந்த கண்ணியத்துடன் வெளியிட்டிருக்கிறேன். ஆண் -பெண் இருவருக்குள்ள காதலை எப்படி போற்றுகிறோமோ அதையே இந்த பெண்கள் விஷயத்திலும் காட்டியிருக்கிறேன் “என்கிறார் இயக்குநர் ராம்கோபால்வர்மா.
இந்த கொரானா காலத்திலும் ஓடிடி தளத்தில் படங்களை காசு பார்த்து வருகிறவர்களில் இவர் முக்கியமானவர்.
டிரைய்லருக்கும் காசு வாங்கிய மனுஷனாய்யா !
ஒரு காலத்தில் சிறந்த படங்களை கொடுத்திருப்பவர்தான் ,என்றாலும் தற்போது ஏனோ சதைப்பித்துடன் அலைகிறார் !அடல்ட் படங்கள் என்றுசொல்வதா ,நிர்வாணப்படம் என்று சொல்வதா?நிர்வாணம் என்கிற இவரது படம் வசூலை வாரியிருக்கிறது.
அதன் எதிரொலியாக தற்போது இரண்டு பெண்களுக்கிடையேயான ‘லெஸ்பியன்’உறவை டேஞ்சரஸ் என்கிற பெயரில் படமாக்கியிருக்கிறார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல்படத்தின் இயக்குனர் என்கிற பெருமை வர்மாவுக்கு கிடைத்திருக்கிறது.
இவரது படங்களில் நடிப்பதெற்கென எங்கிருந்துதான் நடிகைகள் வருகிறார்களோ?தெரியவில்லை.
ஓடிடி தளங்களின் படங்களுக்கு தணிக்கை என்கிற அளவுகோல் இல்லை.இருந்தாலும் என்ன ஆகப்போகிறது?
சென்சார் செய்யப் பட்ட படங்களிலேயே வக்கிரமும் காமமும் தூக்கலாகத்தானே இருக்கின்றன.