இசைப் புயல் ரகுமானின் இசையில் காதலர்கள் மயங்கியது உண்டு.
அதற்கு வைரமுத்துவின் வசீகர வரிகளும் துணையாக இருந்தன.
“செவ்விதல் வருடும் போது,
தேகத்தங்கம் உருகுமே.!
உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே “என்கிற வரிகளை ரகுமானின் இசை உயிர்ப்பித்தது !
“உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ?”
என்கிற பாடல் இன்றும் காதுகளை இன்னிசையால் நிரப்புகிறதே!
இத்தகையை இனிமையா வழங்கிய ரகுமானை என்றைக்காவது நிறை காதலுடன் பார்த்ததுண்டா?
அந்த வாய்ப்பினை தந்திருக்கிறார் இயக்குநர், நடிகர் ஜி.எம்.குமார்.
இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தில் ஹைனஸ் ஆக நடித்திருந்தார். ஒரு காலத்தில் நடிகை பல்லவியின் கணவர்.தற்போது இருவரும் பிரிந்துவிட்டார்கள் .
குமார் வெளியிட்டுள்ள படத்தில் ரகுமான் மனைவி சைரா பானு இருவரும் காதல் பெருக்குடன் இருப்பதை அந்த புகைப்படம் காட்டுகிறது.
அரிய படம்.!