எத்தனையோ பேர் எவ்வளவோ நினைவுப்பரிசுகள் கொடுத்தாலும் மறக்கமுடியாதது என சில இருக்கும்.
அப்படி ஒரு நினைவுப்பரிசினை தளபதி விஜய்க்கு கொடுத்திருப்பதாக சொல்கிறார் பிகில் பட நடிகை ஆதிரை .அந்த படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருப்பவர்களில் இவரும் ஒருவர்.
தளபதி விஜய்யின் பிறந்த நாளுக்காக வித்தியாசமான பரிசு வழங்க வேண்டும் என்று ஆதிரை ஆசைப்பட்டிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்தப்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
தளபதி வியந்துபோய் பாராட்டிய அந்த பரிசு என்ன தெரியுமா?
சிறிய புட்பால் கிரவுண்ட் மேஜை.அதில் தமிழ் நாடு அணியும் மணிப்பூர் அணியும் மோதுகிற மாதிரியான பொம்மைகள். விஜய்யின் சிறிய உருவம் படத்தில் வந்த ஜெர்சி பனியன் நம் பருடன்.!