செவ்வாய் இரவு வெளியான அதிர்ச்சியான செய்தியால் ரசிகர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
கொரானாவாக இருக்குமோ என்கிற சந்தேகத்துடன் நடிகர் சஞ்சய்தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரானா இல்லை ! ஆனால் அதை விட அதிர்ச்சியான செய்தி.
“நுரையீரல் கேன்சர்! “புற்று நோய்.
பதற வைக்கவில்லையா?
அம்மா நர்கீஸ் தத் இறந்தது புற்று நோயினால். சஞ்சய்தத்தின் முதல் மனைவியை பலி கொண்டதும் கேன்சர்தான்.
இப்போது சஞ்சய்தத்துக்கு நுரையீரல் புற்று நோய். இதென்ன வழி வழியாய் வருகிற கொள்ளை நோயா?
பொதுவாக மரணம் அடைந்த நட்சத்திரங்களில் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். குறிப்பாக பிரபலங்கள்.
எதனால் ? சில தீய பழக்கங்கள். மது ,புகைத்தல் ,போதை பொருட்கள் .நல்லவேளையாக புதிய தலைமுறை நடிகர்களில் புகைக்கும் பழக்கம் அதிகம் இல்லை.போதை பொருட்களை பயன்படுத்துகிறவர்களும் இல்லை.
சஞ்சய் தத் பற்றி அவரது மனைவி மான்யாட்டா தத் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
“கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்துவிட்டோம் .ரசிகர்களின் பிரார்த்தனையினால் இந்த கட்டத்தையும் கடந்து விடுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சஞ்சு இயல்பிலேயே எதிர்த்து போரிடும் ஆற்றல் உள்ளவர்.
கடவுள் எங்களுக்கு தந்துள்ள சோதனையை கடந்து வெற்றி பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.ரசிகர்களது பிராத்தனைகள் எங்களுக்கு வலிமையாக இருக்கும்” என்பதாக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இறைவனை பிரார்த்திப்போமாக !