பிரபல இந்தி நடிகர் திலீப் குமார் மரணம் அடைந்துவிட்டதாக பாலுவுட்டில் மட்டும் இன்றில், இந்திய திரையுல்கத்திலேயே பெரும் பரபரப்பு எற்பட்டது. இந்த நிலையில், அது வெறும் வதந்தி தான் என்று நடிகர் அமிதாப் பச்சான் நிரூபித்துள்ளார்.
1944-ம் ஆண்டு வெளியான ஜ்வார் பட்டா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி புகழ் நடிகரானவர் திலீப் குமார். 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தன்னுடன் கதாநாயகியாக நடித்த சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில், நடிகர் சல்மான் கானின் வளர்ப்பு தங்கையான அர்பிதாவுக்கு மும்பையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த தம்பதியர் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில், திலீப் குமார் மரணம் அடைந்துவிட்டதாக நேற்றிரவு மும்பையில் வதந்திகள் பரவின. சமூக வலைத்தளங்களின் மூலமாக மேலும் பெரிய அளவில் பரவிய அந்த வதந்தி, உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதனையடுத்து, அவரது இல்லத்துக்கு ஏராளமான விசாரிப்புகள் குவியத் தொடங்கின. இந்த விவகாரத்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ‘டுவிட்டர்’ அபிமானிகளுடன் இன்று பரிமாறிக் கொண்ட தகவலில், ’யூசுப் சாஹிப்(இயற்பெயர்) திலீப் குமாரைப் பற்றி சில அடிப்படையற்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
நான் இப்போது தான் சாய்ரா பானுவுடன் தொலைபேசியில் பேசினேன். திலீப் குமார் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.’ என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
நடிகர் திலீப் குமாருக்கு தற்பொது 91வயதாகிறது.