பிரபல நடிகை கொச்சி வீதிகளில் குப்பை பொறுக்கியதை யாருமே கண்டு கொள்ளவில்லை. அவரது உறவினர்களை நடிகை நெருக்கத்தில் பார்த்தும் அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை. யாரோ ஒரு குப்பை பொறுக்கி என்று நினைத்து ஒதுங்கி விட்டார்களாம்.
மலையாள நடிகை லேனா சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்.
ஆர்டிகிள் 21 என்பது படத்தின் பெயர் .இந்த படத்தில் லேனாவுக்கு குப்பை பொறுக்கி வேலை.
கொச்சியில் நெருக்கடியான வீதிகளில் இவர் குப்பை பொறுக்கியதை காருக்குள் கேமராவை ஒளித்து வைத்து படமாக்கியிருக்கிறார்கள்.
“சில கடைகளில் காசு கேட்டபோது என்னை விரட்டிவிட்டார்கள். நடிகையாக போய் இருந்தால் கத்தை கத்தையாக அள்ளிக் கொடுத்திருக்க மாட்டார்களா?”என கேட்டு சிரிக்கிறார்.
பழநிக்கு வந்து பழநியாண்டவருக்கு மொட்டை போட்டு தலை நிறைய சந்தனம் அப்பிக்கொண்டவர்தான் இந்த நடிகை.