விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஹரிகா கொனிடேலா.
இவர் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான நாக பாபுவின் மகள் .
கடந்த சில மாதங்களாக இவரது திருமணம் குறித்த சில தகவல்கள் இணையதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், நிஹரிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைதன்யா என்பவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து என்னுடையவர் என்று குறிப்பிட,அது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வைரலாக பரவியது.
இந்நிலையில், நிஹரிகா-சைதன்யா இருவருக்கும் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன், வருண் தேஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இருவருக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறுகிறது