விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மீனா மகள் நைனிகா, விஜய் மகள் திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. தெறி படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் டப்பிங், முடிய இன்று சமந்தா டப்பிங்கும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். ‘தெறி படத்தின் டப்பிங் முடிந்தது. இந்த படத்தில் எனக்கு இதயம் கவரும் வகையில் நல்ல கேரக்டர் கொடுத்த இயக்குனருக்கு எனது நன்றி’ என்று சமந்தா புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.