பாரதிராஜாவின் அறிமுகம் சுகன்யா.’புதுநெல்லு புதுநாத்து’படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கியவர் .
தொடர்ந்து, கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்பட பல ஹீரோக்களுடன் நாயகியாக நடித்தவர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை சுகன்யா முதன்முதலாக ஒரு பாடலை தானே எழுதி கம்போஸ் செய்துள்ளார் .
“இந்திய நாட்டின் கொடியை வணங்கு.
பாரத நாட்டின் மண்ணை வணங்கு
தாய்த்திருநாட்டின் தன்மை உணர்ந்து,
செவியில் மொழிகள் தேனாய் பாய்ந்து,
தாயே தாயே பாரத தாயே.”.
.எனது தொடங்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இது குறித்து நடிகை சுகன்யா தனது சமூக வலைத்தளத்தில் , ’ஒற்றுமை ஓங்க வேண்டும் வேற்றுமை நீங்க வேண்டும் என்ற இந்த பாடலை முதன் முதலாக நான் எழுதி கம்போஸ் செய்துள்ளேன். பாரத் மாதா கி ஜே. அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.