நம்புற மாதிரியா இருக்கு, இந்த அம்மா சொல்றத பார்த்தா ! அதாவது நெருக்கமான சீன் ,கிஸ் பண்ற சீன்ல நடிக்கிறதுக்கு பயமா இருக்குமாம்.
சொல்றது யார் தெரியுமா பிபாசா பாசு .செக்சி சைரன் என்று சொல்லப்படக்கூடியவர்.
சொல்றது பழைய கதைன்னாலும் நாம நம்பணும்ல!
2012-ல் வெளியான இந்திப்படம். ஜோடி பிரேக்கர்ஸ். இந்த படத்தில் நம்ப மாதவன் பிபாசா பாசு ஜோடி.
சாக்லேட் பாயான மாதவனை கிஸ் பண்ணும்படி பிபாஷாவை டைரக்டர் கேட்டிருக்கார். அம்மையாருக்கு ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி இருந்துச்சாம்.
“நான் நடிகைன்னாலும் அந்த மாதிரியான நெருக்கமான காட்சிகளில் நடிக்கிறதுன்னா ரொம்பவும் பயப்படுவேன். அதிலும் என்னுடைய நெருங்கிய நண்பர் மாதவன். அவரை கிஸ் பண்ணுங்கன்னதும் ஆடிப்போயிட்டேன். ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி ஆகிப்போச்சு.என்ன செய்றது?
“என்ன பிபாஷா. அது மாதவன் .உங்க நண்பர் நல்லாவே தெரிஞ்சவர் .அவரை கிஸ் பண்ண முடியாதா?” என்று செட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள் .
“அதானே பிராப்ளம்.பெஸ்ட் பிரண்ட். எப்படி பண்றது?”என்று சொன்னேன். “எப்படியோ அந்த சீன் எடுத்து முடிஞ்சதும் மேடி உள்பட அத்தனை பேருக்கும் ஒரே சிரிப்பு சத்தம் தான்.சத்தம் இல்லாத முத்தத்துக்கு அப்படி ஒரு சிறப்பு”என்கிறார் பிபாசா !