கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு கிட்டத்தட்ட சென்னை நகரமே மூழ்கியது என்பதை நம் வருங்கால சந்ததிகளும் அவர்களது சந்ததிகளுக்கு கதை,கதையாய் சொல்லப்போகும் துயரக்கதையை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. மறைத்து விட முடியாது சுனாமி ஏற்படுத்திய வடுக்களை விட இது மிகவும் கொடிய வடுக்களை நமக்குள் ஏற்பாடுத்தி விட்டு சென்று உள்ளது. இந்நிலையில் இந்த வெள்ளம் குறித்து தமிழில் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. பிரபல நடிகையும் பெண் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு அவர் ‘டிசம்பர் 1-2015’ என்ற டைட்டிலை தேர்வு செய்திருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை அவர் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே சம்பவத்தை வைத்து இயக்குனர் வசந்த பாலன் செம்பரம்பாக்கம் என்ற பெயரில் படமாக திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பின்னவரின் கதையில் சிக்கி சின்னாபின்னமாக போவது பிரபல அரசியல் கட்சி தானாம்! ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் செம்பரம்பாக்கம் பல கதைகள் சொல்லும் என்கிறது கோலிவுட் வட்டாரம்!