மறுபடியும் காஜல் அகர்வால் கல்யாண சேதி உயிர்ப்பித்திருக்கிறது.
கடந்த ஆண்டு தனது கலியாணம் சீக்கிரம் நடக்கும் என்பதாக அவரே அறிவித்திருந்தார்.
மாப்பிள்ளையாகப்போகிறவர் பிலிம் இண்டஸ்ட்ரியை சேர்ந்தவராக இருக்கமாட்டார் ,அரேஞ்டு மேரேஜ்தான் என்கிற தகவலையும் சொல்லியிருந்தார்.
கொரானா வந்தது மொத்த சினிமா உலகமும் மூடிக்கொண்டது. வீட்டிலேயே பொழுதை போக்க வேண்டிய கட்டாயம். இந்த 4 மாத லாக் டவுனை செமத்தியாக அனுபவித்தவர் கரீனா கபூர்தான். இப்போது கர்ப்பம் என்பதாக அறிவித்திருக்கிறார். சல்யூட் சயீப் அலிகான்! பிறக்கப்போகிற பிள்ளைக்கு லாக்டவுன் கான் என்று பெயர் வையுங்கள்.!
காஜலுக்கு கல்யாணம் ஆகியிருந்தால் கரீனா மாதிரி தாயாக வாய்ப்பு கிடைத்திருக்கும். .இப்போது அவரைப்பற்றி வந்திருக்கிற தகவல் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என்பதுதான்.! வழக்கம்போல இதை தெரிவித்திருப்பது வட இந்திய ஊடகம்தான் .மாப்பிள்ளை பெரிய பிசினஸ்மேன், பெயர் கவுதம் என்பதாக பெயரையும் சொல்லியிருக்கிறது.
காஜலின் குடும்பம் இந்த செய்தி பற்றி வாயைத் திறக்கவில்லை. இந்தியன் 2 படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் இத்தகைய செய்திகளை கிளப்பிவிடுவதன் நோக்கம் தெரியவில்லை.