பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் நாட்கள் கடந்தும் அதன் வலியில் இருந்து மீண்டதாக தெரியவில்லை. சுஷாந்த் மரணத்துக்கு காரணம் நெபோட்டிசம் என்கிற வாரிசு ஆதிக்கம்தான் என்கிற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருக்கிறது. யார் யார் காரணகர்த்தாக்கள் என்று கருதுகிறார்களோ அவர்களது செல்வாக்கினை சரிந்து போகும்படி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அலியாபட், கரன்ஜோகர் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.
பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் பிரமாண்ட படமான ஆர் ஆர் ஆர் என்கிற படத்தில் அலியாபட்டுக்கு முக்கியமான வேடம் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த நடிகையை படத்திலிருந்து நீக்கும்படி கோரிக்கை வலுத்து வருகிறது. மிரட்டலும் வருகிறது. அந்த அளவுக்கு ரசிகர்கள் ஆத்திரமாக இருக்கிறார்கள்.
இதனால் அலியாபட் நடிகையை படத்திலிருந்து தூக்குவது பற்றி ராஜமவுலி யோசிப்பதாக சொல்கிறார்கள். அவர் தொடர்பான எந்தவொரு காட்சியும் படமாக்கப்படவில்லை என்பதால் எத்தகைய சேதமும் இல்லை என்கிறார்கள்.