சென்னை வந்துள்ள மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்தார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் நரேந்திரன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது பா.ஜனதா-ச.ம.கா கூட்டணி பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டணியில் சேர சரத்குமாருக்கு ப.ஜா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று கூட்டணியில் சேருவதாக சரத்குமார் தெரிவித்தார். இதையடுத்து ஜவடேகர் ,தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் நரேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மகிழ்ச்சியுடன் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து சரத்குமார் கூறியதாவது, ‘என் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தார்கள். கூட்டணியில் சேருமாறு அழைப்பு விடுத்தனர் கொள்கை அளவில் அதை ஏற்றுக்கொண்டேன். விரைவில் மற்ற விவரங்கள் குறித்து 2 நாளில் பேசி முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.