“கொரானாவை கொன்றொழித்து குரல் இசைத்து வா” என்று நெகிழ்ந்து பாடியிருக்கிறார் இசை அமைப்பாளர் சவுந்தர்யன் .
கொரானாவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். தொடர்ந்து உடல்நலம் கவலைக்கிடமாகவே இருக்கிறது.
“கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணி யம் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகர்கள் ரஜினி,கமல் பிரபு, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, பிரசன்னா, விக்ரம் பிரபு, விவேக், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், மித்ரன் ஜவஹர், மனோபாலா, நடிகைகள் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், கங்கனா ரணாவத், ஐஸ்வர்யா ராஜேஷ், நிவேதா பெத்துராஜ், பிரனிதா, என திரையுலகமே திரண்டு , எஸ்.பி.பி குணமடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளனர்,
இந்நிலையில், “சேரன் பாண்டியன்”படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான சௌந்தர்யன் தனது சமூக வலைதளத்தில் எஸ்.பி.பி. பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டு,அதில் .”மயக்கிய குரல் மங்கி விடக்கூடாது. உருக்கிய குரல் ஒடுங்கி விடக்கூடாது. ஏழு ஸ்வரங்களால் எண்ணற்ற பாடல்களை எனக்கும் பாடிய எஸ்.பி.பியே, கொரோனாவை நீ கொன்றொழித்து குரல் இசைத்து வா” என பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.