அதில் என்னய்யா திரில் இருக்கிறது ?அடுத்தவங்க டிவிட்டர் கணக்கை முடக்கி வைக்கிறதில் என்ன வீரம் இருக்கு?அதுவும் நடிகைகள் கணக்கை முடக்குவதில் அவ்வளவு ஆனந்தம்.!
லாக்டவுன் காலத்தில் தங்களை தயாரிப்பாளர்கள் மறந்து விடக்கூடாது ,ரசிகர்களும் மறந்து விடக்கூடாது என்பதற்காக உடம்பை நெளித்தும் வளைத்தும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுகிறார்கள் .அதைப்போய் முடக்கி வைக்கிறார்கள்.!
நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ஷோபனா, ஊர்வசி ரவ்தெலா உள்பட பல நடிகைகளின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. பின்னர் சைபர் கிரைம் போலீஸ்,மற்றும் டெக்னிக்கல் குழுவால் அந்த கணக்குகள் மீட்கப்பட்டதாக அவர்கள் அறிவித்திருந்தனர்
.இந்நிலையில், நடிகை இஷா ரெப்பாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாம்.. ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கும் இஷாவின் கணக்கை மர்ம நபர்கள் பிளாக் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.