கொரானா பரிசோதனையினால் கன்னித்தன்மையை இழந்தேன் என்று ஒரு நடிகை கூறினால் அதற்கு என்ன அர்த்தம்?
அதில் உள்ளர்த்தம் ஏதாவது மறைந்து இருக்கிறதா?
இதோ நடிகையின் வாக்குமூலம்.
பிரபல பாலிவுட் நடிகை,தொலைக்காட்சி தொகுப்பாளினி, மற்றும் வெப்சீரிஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் குப்ரா சேட்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பல்வலி காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றிருக்கிறார், அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையும் நடந்திருக்கிறது.
அந்த அனுபவத்தை தனது டுவிட்டரில் நடிகை குப்ரா சேட் பகிர்ந்திருக்கிறார்.
’கொரோனா பரிசோதனை மூலமாக எனது கன்னித் தன்மையை இழந்தேன். நான் நினைத்தது போல அது ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. விரைவிலேயே முடிந்துவிட்டது. இந்த பரிசோதனையின் போது எனது முன்னாள் காதலர்கள் சிலர் ஞாபகத்திற்கு வந்தனர். மேலும் பரிசோதனையின் போது நான் தும்மினேன்’
என்றும் பதிவு செய்துள்ளார்.பரபரப்பை ஏற்படுத்தி வைரலான இப் பதிவில் உள்ள நகைச்சுவை உள் அர்த்தத்தை உணர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஜாலியான எமோஜிகளை பதிவு செய்து வருகின்றனர்