கொரோனா லாக்டவுன் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனால்,சினிமா படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் செயல் பட அனுமதிக்கப்படவில்லை.
,சில தளர்வுகளுடன் டப்பிங் எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும்,தீவிரமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகிறது சினம் படக்குழு.
இது குறித்து இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் கூறியதாவது:
“படத்தின் கதாநாயகன் அருண் விஜய் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டார். தற்போது மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகள்நடந்து வருகிறது. இது முடிந்ததும் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை தொடங்க இருக்கிறோம்.
சமீபத்தில் வெளியான படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரில், அருண் விஜய்யின் ஆங்கார தோற்றம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட் என்கிற கேரக்டரில் அருண் விஜய் நடிக்கிறார். அவரது கேரக்டர் எமோஷனலானது. அதே நேரத்தில் கோபம் கொள்ளும் கேரக்டர். அவரது கோபத்தைச் சூழ்நிலைகள் தீர்மானிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது திரில்லர் படமென்றாலும் குடும்பங்களை கவரும் பல உணர்ச்சிப் பூர்வமான தருணங்களும், நேர்மறை விசயங்களும் நிறைய இருக்கிறது.என்கிறார்.
இதில் அருண் விஜய் ஜோடியாக பாலக் லால்வாணி நடிக்கிறார். காளிவெங்கட் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஷபீர் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.