வானுதிர்த்த கதிராக
நெல்லூரில்
வந்துதிர்த்த இசையே!
குழல் இனிதா?
யாழ் இனிதா? என்றால்
நின் குரலே
இனிதென்பேன்.
முக்கனி சாறெடுத்து
கொம்புத் தேனில்
முகிழ்த்தெடுத்த
அருஞ்சுவைக்கு
மேலானது
நின் குரலே
சுவையென்பேன்.
அங்கிங்கெனாதபடி
எங்கும்
நின் குரல் கேட்க
எட்டுத் திக்கும்
எதிரொலிக்க
எழுந்து வா! பாலு
விரைந்து வா!
இன்னிசை
பண்ணிசை
நல்லிசை
அழைக்கிறது
எழுந்து வா! பாலு
விரைந்து வா!
தேனிசைத் தென்றலும்
ஏழிசை சுரங்களும்
நின் வரவுக்காக
காத்திருக்க
எழுந்து வா! பாலு
விரைந்து வா!
ஆம்..
பாரதிராஜா வேண்டியபடி
அகிலம்
ஆண்டவனை
பிரார்த்திக்க
நீ..வருவாய்!
திருவாய் மலர்வாய்!..
–கலைப்புலி S.தாணு