
உலக நாடுகளை அச்சறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள் இந்தியா உள்ளிட சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அவை 2,ம் கட்ட அல்லது 3 ம் கட்ட பரிசோதனையிலும் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை புதிதாக கண்டு பிடித்து உள்ளது.
இந்த கண்டு பிடிப்புக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.மேலும் அது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமெரிக்க மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைக்கூட அறிக்கையில், ‘டி3எக்ஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த களிம்பை (மூக்கில்) தடவிக்கொண்ட 30 வினாடிகளுக்கு பிறகு எந்த வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அட்வான்ஸ்டு பெனிட்ரேசன் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான டாக்டர் பிரையன் ஹூபர் கூறுகையில், “ ‘டி3எக்ஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த களிம்பு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது கொரோனாவுக்கு எதிரான முதல் தர சக்தி வாய்ந்த மற்றும் பயனுள்ள தடுப்பு மருந்து” என்கிறார்.
இந்தியாவிலும்,கொரோனா தொற்றினைத் தடுக்கும் வகையில், நாசித் துவாரங்கலில் பூசிக்கொள்ளும் களிம்பை உருவாக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சட்டபூர்வ அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் ஆதரவு அளித்துள்ளது. இதனை, மும்பை ஐஐடியின் உயிரி அறிவியல் மற்றும் உயிரிப் பொறியியல் துறை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
அதே போல்,ஹாங்காங்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜோசப் குவான் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள களிம்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து ஜோசப் குவான் கூறுகையில், மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் அல்லது உபயோகப்படுத்தும் இடங்களில் இந்த களிம்பை ஸ்பிரே செய்வதன் மூலம் அந்த இடத்தில் வைரஸ்கள் முற்றிலுமாக அழிக்கப் படுவதுடன் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படுகிறது ,
குறிப்பாக லிப்ட் , பொத்தான்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம், ஒரு இடத்தில் இந்த களிம்பை தெளித்தபின் கிருமி நாசினிகளை கொண்ட மில்லியன் கணக்கான நானோ காப்ஸ்யூல்கள் கொண்டுள்ள இந்த மருந்து காய்ந்த பிறகும் பாக்டீரியா வைரஸ் மற்றும் மோசமான கிருமிகளை கொள்வதில் திறம்பட செயல்படும் , கிட்டத்தட்ட அது 3 மாதங்கள் வரை செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .












