தொலைக்காட்சிகளின் வழியாக வந்த செய்திகளின் அடிப்படையில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் ஜவடேகரின் முழு அறிக்கை வந்தபின் தென்னிந்திய வர்த்தக சபையின் பிரமுகர் கொட்டாரக்காரா விவரங்களை வெளியிடுவார் என சொல்கிறார்கள்.
பொதுவான விதிமுறைகளிலேயே சில முரண்பாடுகள் இருக்கின்றன.ஆறு அடி சமூக இடைவெளி என்பது சாத்தியமற்றது. உதாரணமாக கணவனுக்கு மனைவி காப்பி கொடுப்பது என்றால் ஆறு அடி இடைவெளியில் இருந்து கொண்டு “இந்தாங்க “என்று எட்டி கொடுக்க முடியுமா? முழு விவரம் கிடைத்த பிறகுதான் விவரம் தெரியவரும்.
திரைப்படங்கள், தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நடத்துவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். சில நெறிமுறைகள் பின்வருமாறு…
1.படப்பிடிப்புக்கு வருவோரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.
2 .படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.
3 .படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.
4 .உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
5 .உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கையுறை கட்டாயம் அணிய வேண்டும்.
6 .படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
7.குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.
8.படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
10 .வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.