சுஷாந்த் சிங் மரணத்தினால் நடிகை கங்கனா ரனாவத் பிரச்னைக்குரியவர்களில் ஒருவராகிவிட்டார். தன்னையும் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டு விடுவார்கள் என்று சொல்கிற அளவுக்கு விவகாரமான நடிகையாகிவிட்டார். சுஷாந்த் சிங்குக்கு ஆதரவான நிலை எடுத்த அவருக்கு ஆதரவு கணிசமாக இருந்தது.
ஆனால் அண்மையில் அவர் தெரிவித்திருந்த இட ஒதுக்கீடு பற்றிய கருத்து அவரும் எத்தகைய ஆதிக்கவாதி என்பதை காட்டியிருக்கிறது. தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்துவருகிற அவர் தமிழர்களுக்கு எதிரான கருத்தினை ஆதரிக்கிறார் இந்த நவீன இந்தியர்.!
“இட ஒதுக்கீடு நவீன இந்தியர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது , நமது அரசியலமைப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டை பிடித்துக்கொண்டு இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கங்கனாவுக்கு எதிராக ட்விட்டரில், #Boycott_Kangana என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி விட்டது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார். நெபோடிசம் பற்றி பேசும் அவர் சாதி விவகாரத்தில் அமைதி காப்பது அவரது இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. நெபோடிசம், அவுட்சைடர்களை தடுப்பது போலவே, சாதியும் மற்ற சாதியினரை தடுக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்.