முதல்வர் ,துணை முதல்வர் இருவருமே நேற்றே கேப்டன் விஜயகாந்துக்கு முன்னதாக பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிவிட்டார்கள்.
எல்லாமே தேர்தல் கால அர்ஜென்ட் தான்.! முதலில் ஓபிஎஸ் வாழ்த்து வந்தது. தொடர்ந்து இபிஎஸ் வாழ்த்தும் வந்து விட்டது. ராஜ்ய சபா சீட்டுத்தருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டவர்கள் இவர்களை வருகிற தேர்தலில் வச்சு செய்ய வேண்டுமென்ற கோபத்தில் அக்காவும் தம்பியும் இருக்கிறார்கள்.
பிரமுகர்கள் வருவதற்கு முன்னர் குடும்பத்தினர் வாழ்த்துகளை சொல்லி வாழ்த்து பெற்று செல்பியும் எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
இனிமே வருகிற அரசியல்வாதிகளின் வாழ்த்துகள் அனைத்துமே எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்சிகள் கவனம்.