வனிதாவின் 3 ஆவது கணவர் பீட்டர் பாலுக்கு என்னாச்சு?
முதல் மனைவியை விவாகரத்து பண்ணாமலேயே வனிதாவை கல்யாணம் செய்து கொண்டவர்தான் பீட்டர் பால். இவருக்கு மகன் ,மகள் என இருவர் இருக்கிறார்கள். மகன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் கொரானா காலகட்டத்திலேயே பீட்டர்பால் வனிதா கல்யாணம் நடந்தது.
இவர்களின் கல்யாணத்தைக் கண்டித்து சமூக வலை தளங்களில் பட்டி மன்றமே நடந்தது . தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சு வலியாம்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். எதற்காக என்பது தெரியவில்லை.
இதைப்பற்றி வனிதா எதுவும் வெளிப்படையாக சொல்லவில்லை.என்றாலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு எழுதி இருக்கிறார்.
” சொல்ல நிறைய இருக்கிறது…. என்னால் எதுவும் இயலவில்லை.. கடவுள் வல்லவர் … நம்பிக்கையுடன் இருப்போம்… ஒவ்வொன்றும் ஒரு காரணத்துக்காகவே நடக்கிறது… எல்லாம் சரியாகிவிடும் வாழ்க்கை கடினமானது.. எதிர்கொள்வோம் .. என்னை நம்புங்கள் .. எல்லாம் சரியாகிவிடும். .. கடினமானதை ஏற்றுக்கொண்டு திரும்பக் கொடுங்கள்… உன்னால் முடிந்ததை உலகுக்கு காட்டுங்கள்”..
இவ்வாறு வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.