சூரரைப் போற்று வரிசையில் தற்போது விஜயசேதுபதி ,ஜெயம் ரவி ஆகியோரின் படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக தகவல்கள் வருகின்றன.
ஊறுகாயாக இருந்தால் துணியால் வடுகட்டி பத்திரமாக வைத்துக்கொள்ளலாம். எடுத்திருப்பது படம் அல்லவா! அதை பரணில் போட்டு பத்திரப்படுத்த முடியுமா? தியேட்டர் திறப்பது எப்ப? திரையிடுவது எப்ப? அதுவும் ரிலீசுக்காக வரிசை கட்டி நிக்கிறபோது நம்ம படத்துக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்குமா என்கிற பயம் வேற.!
அதனால் என்ன?
இருக்கவே இருக்கிறது ஓடிடி தளம். பணமும் முன்னதாகவே கிடைத்து விடுகிறது. அதனால் சூரரைப் போற்று வரிசையில் நாமும் போய் நின்று விடலாம் என சில தயாரிப்பாளர்கள் ரெடியாகி விட்டார்கள்.
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் ’க/பெ ரணசிங்கம்’
படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
வடை ரெடி . விற்பதற்கு கடை இல்லை என்றால் சுட்ட வடையை நாமே தின்ன முடியுமா? திறந்திருக்கிற டீ கடை ஒன்றில் விற்று விட வேண்டியதுதான்.!
திரையரங்குகள் திறக்காமல் இருப்பதால் இந்த படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்ய முடிவு. முன்னணி நிறுவனமான ஜி 5 நிறுவனம் வாங்கிவிட்டது என்கிற தகவல் .