“சிலந்தி” படத்தை இயக்கியவர் ஆதிராஜன், பத்திரிகையாளரான இவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் 4 வது படம் “மாஸ்க்”.
நோயாளிகளை பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கும் சில மனசாட்சியற்ற டாக்டர்களால் ஏற்படும் விபரீத நிகழ்வுகளும், அதனால் உருவாகும் பாதிப்புகளையும், எதிர்விளைவுகளையும் பரபரப்பாக சொல்லியிருக்கிறார்.
நொடிக்கு நொடி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அதிரடி திரில்லர் படமாக உருவாகிறது. கதாநாயகன் கதாநாயகி தேர்வு நடந்து வரும் இப் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் விஜய்பாலாஜி.
இவருடன் அருள்தாஸ், சம்பத்ராம், சேரன் ராஜ், ரஞ்சன், திரைப்பட தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், டி. சிவா, ‘பெப்சி’ சிவா, வனராஜா, “மரகத நாணயம்” வீரா, பாரதி, அஜய் .எஸ் ஆகியோர்முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இமான் அண்ணாச்சி, மதுமிதா, சின்னத்திரை சரத் ஆகியோருடன் நகைச்சுவை கூட்டணி அமைத்துள்ளார்.
கே.ராஜன் தயாரித்த “டபுள்ஸ்”படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஸ்ரீகாந்த் தேவா, தனது 101வது படமாக “மாஸ்க்” படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை,எஸ். சக்திவேல் கவனிக்க,கிரீன் மேஜிக் கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆதிராஜன் தயாரிக்கிறார்.