தெலுங்கு திரையுலகின் மெகா நட்சத்திரங்கள் சிரஞ்சீவியும், மோகன் பாபுவும் பல ஆண்டு கால நெருங்கிய நண்பர்கள்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர்தான் மோகன்பாபு.
சிரஞ்சீவியின் பிறந்த நாள் அன்று அவருக்கு அனைவரும் வியக்கும் வகையில் ஒரு அட்டகாசமான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்மோகன்பாபு.
.அதாவது,முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்ட அட்டகாசமான மோட்டார் சைக்கிள் ஒன்றை நண்பர் சிரஞ்சீவிக்காகவே பிரத்யோகமாக தயாரித்து வழங்கியுள்ளார்.
அந்த மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் நம்பர் பிளேட் இருக்குமிடத்தில் ‘மெகா ஸ்டார்’ என பொறிக்கப்பட்டுள்ளது.இப்பரிசை பார்த்த சிரஞ்சீவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லையாம்.