தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்ததை யொட்டி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று அவருக்கு விழா எடுத்தது. இதில் கமல்ஹாசன், பார்த்திபன் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் என சிலர் கலந்துக்கொண்டனர். பலர் எஸ்கேப்.இந்நிலையில் ,
இவிழாவில் கலந்துக்கொண்ட இயக்குனர்,நடிகர் பிரதாப் போத்தன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் இந் நிகழ்ச்சி குறித்து திட்டி தீர்த்து விட்டார். அவர் கூறியுள்ளதாவது,நிகழ்ச்சி தொடங்குவதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக ஆரம்பித்தனர், ஒரு கட்டத்திற்கு மேல் இவர்கள் செய்த தாமதத்தால் நான் கிளம்பியே விட்டேன்.ஆனால், என்னை வலுக்கட்டாயமாக இருக்க கோரினர். ஆனால், நான் கிளம்பிவிட்டேன். நான் பார்த்த நிகழ்ச்சியில், இது தான் மிகவும் மோசமான நிகழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.