அப்பனா இருந்தா என்ன அந்த ஆண்டி சுப்பனா இருந்தா என்ன வயசுக்கு வந்த பொண்ணை கை நீட்டி அடிக்கலாமா?கொலை பண்ணிடுவேன்னு மெரட்டுறானாம்.
அடிச்சிருக்கான்யா அந்த அழகான பொண்ணை.! அவன் பெத்த மகளுக்கு வயசு 19. ஆகுது. சின்னத்திரை சீரியல்களில் நடிச்சு அந்த குடும்பத்தை அந்த பொண்ணுதான் காப்பாத்துது. அந்த பொண்ணு பேரு திருப்தி ஷன் கதர் . கும் கும் பாக்யா தொடர் பேமஸ். அப்பன் பேரு ரத்தன் ஷன் கதர் .
தினமும் மகளை இழுத்துப்போட்டு அடிக்கிறதுதான் வேலை. கட்டுன பெண்டாட்டிய வெளியே போக விடுறது இல்லை. அவளுக்கும் அடி ,மிதி.
எதுக்குய்யா இந்த கொடுமை?
மகளுக்கு 29 வயசு ஆளை கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்.
அட பிடிக்கலையா! அந்த ஆளை கட்டிக்க இஷ்டம் இல்லே. அப்படின்னா விட்டுறனும்ல !
அதெப்படி விடுறது? உன்னை மும்பைக்கு அனுப்பி நடிக்க வச்சேன்ல அந்த மொத்த காசையும் கொடுன்னு டார்ச்சர்.பெத்த அப்பன் பண்ற வேலையா இது?
பொறுத்து பொறுத்து பார்த்திட்டு அந்த நடிகை இப்ப போலீசுக்கு போயிருக்கு. சோனு சூட் ரசிகர்கள் அந்த நடிகையை காப்பாத்துங்கன்னு கோரிக்கை வெச்சிருக்காங்க.
பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு.!