இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி புத்தாண்டிலிருந்து அப்பாவாகப் போகிறார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரது மனைவி அனுஷ்காசர்மா வெளியிட்டிருக்கிறார்.
2017 ,டிசம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. அனுஷ்காவுக்கு தற்போது 32 வயதாகிறது. தன்னுடைய கர்ப்பிணி வயிறுடன் இந்த செய்தியை டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். கணவர் கோலியும் படத்தில் இருக்கிறார்.
“2021 ஜனவரியில் நாங்கள் மூவராகிறோம்” என்கிறது அந்த செய்தி .அனுஷ்காவைவிட ஒரு வயது இளையவர் கோலி .கொரானா ஊரடங்கு சமூக இடைவெளியில் இப்படி ஒரு சாதனை.!