அமீர்கானின் ‘பிகே’ தமிழ் ரீமேக்கில் விஜய்! ஆமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கை ஷங்கர் நண்பன் என இயக்கினார் இதில் விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த்,இலியானா ஆகியோர் நடித்து இருந்தனர்.படமும் நல்ல வரவேற்பையே பெற்றது. இதையடுத்து தற்போது இந்தியில் வெளியாகியுள்ள’ பீகே’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் விஜய் நடிப்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது.. வட இந்தியாவில் வசூலைக் குவித்து வரும் ஆமீர்கானின் ‘பீகே’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்தப் படத்தில் இந்து மதத்துக்கு எதிராக சர்ச்சை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குறிப்பிடத்தக்கது. அதையும் மீறி இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.. ஷங்கர் இயக்கிய நண்பன் விஜய்க்கு நல்ல பெயரைக் கொடுத்தது. அதேபோல், ‘ பீகே ‘தமிழில்’ ரீ’மேக் ஆனால் விஜய் நடிப்பார் என கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.