ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தினருக்கு எட்டாக்கனியாக இருந்தது ஹாலிவுட்!
இப்போது அங்கு இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது சாதாரணமாகிவிட்டது.அந்த அளவுக்கு நம்மவர்கள் முன்னேறியிருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி;பிரகாஷ்
‘கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.
இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட்இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.
எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும் என்கிறார்கள்.
ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.
“எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகப் போகிறது. ’கோல்ட் நைட்ஸ்’ என்ற டைட்டில் கொண்ட இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது’ என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.