பாகுபலி, சாஹோ படங்களைத் தொடர்ந்து நாயகன் பிரபாஸ், ,’ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்துக்கு ராதா கிருஷ்ணா டைரக்டர்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். ஐரோப்பிய பின்னணியில் நடக்கும் பீரியட் காதல் கதையான இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனாவுக்கு முன்புவரை ஜார்ஜியாவில் நடந்து வந்தது.
,இதையடுத்து , நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இதற்கிடையே, பிரபாஸ்,ஆதிபுருஷ் என்ற படத்திலும் நடிக்கிறார்.
இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்கும் இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இதன் திரைக்கதை உருவாகியுள்ளது.
இந்தி, தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர்.
3டி-யில் உருவாகும் இப்படம் பற்றி பிரபாஸ் பேசுகையில், ‘ஒவ்வொரு கேரக்டரும் சவால் நிறைந்தது. இதுபோன்ற ஒரு கேரக்டரை திரையில் கொண்டுவருவது பொறுப்புமிக்கது, பெருமைக்குரியது. இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன்’ என்கிறார்.இந்தப் படத்தில் பிரபாஸ் ராமராக நடிப்பதால், வில்வித்தை பயிற்சியை கற்றுக்கொள்ளுமாறு மேற்கொள்ளுமாறு இயக்குனர், பிரபாஸை கேட்டுக்கொள்ள ,ஏற்கனவே பிரபாஸ், பாகுபாலி படத்துக்காக வில்வித்தை ஓரளவு பயிற்சியை கற்று இருந்தாலும், ஆதிபுருஷ் படத்துக்காக தீவிரமாக பயிற்சி பெற உள்ளாராம். ‘