திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து கதாநாயகியாகவே மிகவும் பிசியாக இருப்பவர் நடிகை சமந்தா.
கொரோனா லாக்டவுனால் கடந்த 5 மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு , தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் மட்டும் லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு,ஒரு சில படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கிறது.
கடந்த ஆறு மாதமாக வீட்டில் இருந்த நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்தார் .
வீட்டில் சும்மா இருக்கும் சமந்தா, அவ்வப்போது,தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அவரிடம் ரசிகர் ஒருவர், ‘நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு கோபம் கொள்ளவில்லை. இதற்கு முன்னாள் இத்தகைய கேள்விகளுக்கு பலமுறை கோபத்தில் கொந்தளித்திருக்கிறார் சமந்தா,
இந்த முறை கொஞ்சம் நகைச்சுவையாக, “நான் 2017 ஆம் ஆண்டில் இருந்து நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன். ஆனால், குழந்தைக்கு வெளியே வர விருப்பமில்லை” என நினைக்கிறேன் என கேள்விகேட்ட ரசிகரை நகைச்சுவையால் அலறவிட்டுள்ளார்.