வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.
தெலுங்கு இந்தி என பல மொழிப்படங்களிலும் நடித்து வந்தவர்,அக்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்,சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ் .
இந்த லாக் டவுன் இவருக்கு சுமையாக இல்லை. செம ஜாலியாக தனது இரு குழந்தைகளுடன் விளையாடியவாறு பொழுதை கழித்து வருகிறார்.
தாய்மை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கடைக்குட்டி மகள் நைரா வயிற்றில் குழந்தையாக இருக்கும்பொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதில் 9 மாதத்திற்கு முன்பு நான் கருவுற்றிருந்த காலத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அந்த தருணம் என் வாழ்வில் மறக்க முடியாதது.கருவுற்றிருக்கும் காலத்தை யாரும் பாரமாக நினைக்காதீர்கள் அது ஒரு அழகிய தருணம், தாய்மை பாரம் அல்ல அது ஒரு வரம் அதை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என பதிவிட்டுள்ளார்.