ஒரு பக்கம் ஐசரி கணேஷ் கொரானாவில் இருக்கிறார் என்கிற செய்தி ஓட ,இன்னொரு பக்கம் அவரது மூக்குத்தி அம்மன் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்கிற செய்தி கும்மாளம் போட போனில் வருகிறார் ஐசரி .!
“ஹலோ நான் ஐசரி கணேஷ் பேசறேன். நலமா இருக்கீங்களா ?” என்று நம்மை விசாரிக்கிறார்.
ஆக எப்படியெல்லாம் செய்திகள் உருவாகி ……!
பரபரப்புக்குன்னே தைக்கப்படுகிற செய்திகளும் உண்டு.!
“நல்லாருக்கோம் சார். மூக்குத்தி அம்மன் ஓடிடின்னு சொல்லப்படுதே ,உண்மையா சார்?”
நம்முடன் தொலைபேசியில் பேசுகிற மனிதரிடம் உங்களுக்கு கொரானாவாமே சார் என்றா விசாரிக்க முடியும்?
“இல்ல. மூக்குத்தி அம்மன் ‘மாஸ்டருடன்’ சேர்ந்தே ரிலீஸ் ஆகும் .எழுதி வெச்சுக்கலாம் “என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் ஐசரி .