வடக்கில் இருந்து வீசிய வாடைக்காற்று அப்படியே தெற்கேயும் பரவியதன் விளைவு கர்நாடகாவை சுற்றி சுழன்று அடிக்கிது. வாடைக்காற்று உடம்பு நல்லதல்ல. பாலிவுட்டில் எம்டிஎம்ஏ , எல் எஸ் டி ஆகிய போதைப்பொருட்கள் வீடுகளில் நடக்கிற விருந்துகளில் சர்வ சாதாரணமாக புழங்குகிறது என்று பிரபல நடிகை கங்கனாரானவத் சொல்லியிருந்தார்.
மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுத்ததோ இல்லையோ தெரியவில்லை.
ஆனால் கர்நாடகாவில் மேகம் அதிர்கிறது.
கன்னட தேசத்தில் மேற்படி போதை மருந்துகளை விற்றதாக கன்னட டி .வி.நடிகை அனிகா ,கேரளத்தை சேர்ந்த அனுப் ,ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் முன்னரே கைது செய்திருக்கிறார்கள்.
பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் நினைவு இருக்கிறதா? சுட்டுக்கொலை செய்யப்பட்டவர். இவரது சகோதரர் இந்திரஜித் லங்கேஷ் கன்னடத்தில் பிரபல இயக்குநர் .இவர் சும்மா இருக்காமல் கன்னட சினிமாவில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது .வேணுமென்றால் போலீசாருக்கு தகவல் தருகிறேன் என்று வாலன்டியராக வந்து வண்டியில் ஏறிவிட்டார்.
“வாங்க ராஜா வாங்க. வந்து பட்டியலை கொடுங்க ” என்று பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அழைப்பு விடுத்தது.
சொன்னபடி சென்றார் .சகல தகவல்களையும் சொன்னார். ஒரு பட்டியலையும் கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.
இது தொடர்பாக என்ன சொல்கிறார் அண்ணன் இந்திரஜித்.
“போதை பொருட்களை பயன்படுத்துகிற சினிமாக்காரர்களின் 15 பேரின் விவரங்களை கொடுத்திருக்கிறேன்.கன்னட திரையுலகினரும் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்.அடுத்த தலைமுறை நடிகர் நடிகையர் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கும். எனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை ” என்று சொல்லியிருக்கிறார்.
பாவமாக இருக்கிறது. அரசினருக்கு வேண்டிய புள்ளிகள் யாரேனும் இருந்தால் விட்ட அம்பு இந்திரஜித் மீது பாய்வதற்கு வாய்ப்பு இருக்கே சாமி.!