பிரபல வழக்குரைஞர் வி.பி.ராமனின் குடும்பத்தை சேர்ந்தவர் மோகன் ராமன். நடிகர் .இவரது மகள் வித்யூலேகாவும் சில படங்களில் நடித்திருக்கிறார். காமடி ரோல்களில் வருவார்.
இந்த காலத்தில் அரேஞ்சிடு மேரேஜை விட அவர்களாகவே பார்த்து பழகி காதலித்து கழுத்தை நீட்டுவதுதானே அதிகமாக இருக்கிறது.
இந்த லேகாவும் விதி விலக்கல்ல .சென்னையை சேர்ந்த சஞ்சய் வாத்வானி என்கிற தொழிலதிபரை காதலித்து வந்தார்.சுகர் பிரீ ஐஸ் கிரீம் ,உள்பட சில உணவு பொருட்களை தயாரிக்கிற கேட்டோ என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.ஜவுளித்தொழிலும் உண்டு. சிந்தி குடும்பம்.
பெற்றோரின் ஒப்புதலுடன் சிந்தி முறைப்படி ரோகோ நடந்திருக்கிறது.அதாவது நிச்சயதார்த்தம்.