வெற்றிப்படங்களின் இயக்குநர் வெற்றிமாறன். இந்திய அரசின் திரைப்பட விருதும் இவருக்கு கிடைத்திருக்கிறது.
திமுகழகத்தின் பாராளுமன்ற உறுப்பினரான கனி மொழிக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமானம் இவருக்கும் நேர்ந்திருக்கிறது.
“உன்னுடைய தாய்நாட்டின் தாய் மொழி உனக்கு தெரியவில்லையா ?” என கேட்டிருக்கிறார் டெல்லி விமான நிலைய அதிகாரி. வெற்றிமாறனின் தாய் மொழி தமிழ் என்பதும் ,இந்தியா என்பது பல மொழிகள் பேசக்கூடிய நாடு என்பதும் அந்த முட்டாளுக்கு தெரிந்திருக்கவில்லை.
மாண்ட்ரீல் பட விழாவில் கலந்து கொண்டு வெற்றிமாறனும் படக்குழு திரும்பியபோது டெல்லி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் இது.
“என்னுடைய அம்மா பேசியது தமிழ். தொடர்பு மொழியாக எனக்கு ஆங்கிலம் இருக்கிறது ” என்று அந்த அதிகாரிக்கு விளக்கி இருக்கிறார்.
உடன்வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ,பட அதிபர் கதிரேசன் இருவரும் வெற்றி மாறன் யார் என்பதை விளக்கி “அவர் நேஷனல் அவார்ட் வின்னர்” என்று சொன்னபின்னரும் அவர்களை 45 நிமிட நேரம் காக்க வைத்திருக்கிறார் அந்த அதிகாரி.
இந்தி ஆதிக்க வெறியர்கள் இந்திய ஒருமைப்பாடுக்கு உலை வைக்கிறார்கள் .