இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியான ’இயற்கை’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்தவர் நடிகை குட்டி ராதிகா.
தமிழில் சரிவர வாய்ப்புகள் அமையாததால் சொந்த மாநிலமான கன்னட திரையுலகத்திற்கு சென்றார் , அங்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய, அங்கு முன்னணி நடிகையானார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தைகள் என ஒதுங்கியவர், தற்போது தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் மட்டும் முன்னுரிமை கொடுத்து சில படங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.
கடந்த 2013ம் ஆண்டு இவர் நடித்து தயாரித்த ’ஸ்வீட்டி நானா ஜோடி’ என்ற கன்னட திரைப்படத்தை அனுமதி இல்லாமல் யூடியூப்பில் வெளியிட்ட மர்ம நபர் குறித்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் .இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.