கொரானா பயத்தில் இருந்து மீள்வதற்காக நடிக நடிகையர் போதைப்பொருட்களை நாடினார்களோ என்னவோ…கன்னட,ஆந்திர சினிமாப்புள்ளிகள் மத்தியில் ஒரே பேச்சாக இருக்கிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மர்ம மரணத்துக்குப் பிறகுதான் போதைப்பொருள் விஷயம் விசுவரூபம் எடுத்தது.
.பெங்களூரில் சினிமாக்காரர்களுக்கு போதை பொருள் விற்றதாக டிவி நடிகை அனிதா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், போதைப் பொருள் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்து,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆந்திராவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தெலுங்கு திரையுலகினருக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தெலுங்கு ஹீரோ ரவிதேஜா உள்பட பலர் சினிமா பிரபலங்கள் விசாரிக்கப்பட்டனர். நடிகை மாதவி லதா பகிரங்கமாகவே ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
“தெலுங்கு சினிமாவிலும் போதைப் பொருள் பழக்கம் இருக்கிறது. சில பார்ட்டிகள், போதைப் பொருள் இல்லாமல் நடக்காது.முன்னணி நடிகர்கள் சிலர், தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக அந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வந்தனர், அந்த வழக்கை விசாரித்த அதிகாரி வேறு துறைக்கு மாற்றப்பட்டார்” என்று கூறினார்
. இது தெலுங்கு சினிமா வட்டாரத்தை அதிர்வுக்குள்ளாக்கியது.
.தமிழில் நடிகர் விஷாலுடன் ஆம்பள படத்தில் நடித்துள்ளவர்தான் மாதவி லதா,பவன் கல்யாணைப்பற்றி மானக்கேடாக பேசியதாக ஸ்ரீரெட்டியை எதிர்த்து போராடி கைதான பெருமையும் இவருக்கு இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, ஆந்திராவில் கடந்த பொதுத்தேர்தலில் குண்டூர் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.